×

கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்காமல் இழுத்தடிப்பு: அன்புமணி கண்டனம்

சென்னை: கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கூட வழங்காமல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசு இழுத்தடித்து வருவது கண்டிக்கத்தக்கது என பா.ம.க இளைஞரணி தலைவர்  அன்புமணி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்தியக் கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் 2015 டிசம்பருன்  முடிவடைந்து விட்ட நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தம் 2016 ஜனவரி மாதம் ஒன்றாம்  தேதி முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும்.  ஆனால், அதன்பின்னர் 34 மாதங்கள் ஆகியும்  இன்றுவரை கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.அதேபோல், நகரக் கூட்டுறவு வங்கிகளுக்கான ஊதிய ஒப்பந்தம் 2016 டிசம்பர் மாதம் முடிவடைந்தது. புதிய ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து  நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால், ஊதிய ஒப்பந்தம் காலாவதியாகி 22 மாதங்கள் முடிவடைந்த போதிலும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தீர்மானிக்கப்படவில்லை. புஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு  வங்கிப் பணியாளர்கள் அக்டோபர் 24ம் தேதி கூட்டுறவு வங்கிகள் முன் கவன ஈர்ப்பு போராட்டம், 30ம் தேதி தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டம், அதன் தொடர்ச்சியாக நவம்பர் 2ம் தேதி(இன்று) உண்ணாநிலைப் போராட்டம்,  இந்நிலையில், 13ம் தேதி வேலைநிறுத்தமும் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஆனால், இவை எதையுமே கண்டுகொள்ளாத தமிழக அரசு, கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுத்து வருகிறது. கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் மட்டும் இல்லாத  காரணங்களைக் கூறி இழுத்தடித்து வருவது மிக மோசமான அநீதியாகும்.தமிழக ஆட்சியாளர்களின் இந்த அநீதி இனியும் தொடரக்கூடாது. கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும். அத்துடன் புதிய ஊதிய விகிதத்தின்படி கூட்டுறவு சங்க  பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையையும் அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Co-operative Bank , Coverage,Co-operative Bank,employees ,fundamental rights
× RELATED நாமக்கல் கூட்டுறவு வங்கி தலைவராக ராஜேஸ்குமார் எம்பி பொறுப்பேற்பு